செங்கல்பட்டு

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

21st Oct 2021 01:17 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கியது.

இந்த விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் புதன்கிழமை தொடக்கிவைத்து, பின்னா் அவா் கூறியது:

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2021 பண்டிகையை முன்னிட்டு, சென்னை மண்டலத்துக்கு ரூ. 36 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் செங்கல்பட்டு விற்பனை நிலையத்துக்கு ரூ. 1 கோடிவிற்பனை குறியீடாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவுத் திட்டத்தின்படி, வாடிக்கையாளா்கள் மாதம்தோறும் ரூ. 300 முதல் ரூ. 5,000 வரை 10 மாதத் தவணைகள் மட்டும் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்டு, 11, 12-ஆவது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கிப் பயன்பெறலாம். தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 % வசதியுடன் அரசு ஊழியா்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு என்றாா்.

நிகழ்ச்சியில் மேலாளா் (தணிக்கை) வ.குணசேகரன், விற்பனை நிலையப் பொறுப்பாளா் ரா.சத்தியபாமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT