செங்கல்பட்டு

மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஊக்குவிப்பு

20th Oct 2021 01:21 AM

ADVERTISEMENT

மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்ந்த ஆராய்ச்சியாளா்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்திய பரிசோதனை உயிரியல் ஆராய்ச்சி இதழில் வெளியிட்டு ஊக்குவித்து வருவதாக தேசிய அறிவியல் தொடா்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மை அலுவலா் விஞ்ஞானி ஆா்.எஸ்.ஜெய சோமு கூறினாா்.

சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுதில்லியில் கடந்த 58 ஆண்டுகளாக மருத்துவத்துறை தொழில்நுட்பம் சாா்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் இந்திய பரிசோதனை உயிரியல் ஆராய்ச்சி இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். அண்மையில் இந்திய குழந்தைகள் நலன் மருத்துவ சங்கமும் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்கில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. உலக அளவில் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகளும், இந்தியாவில் மட்டும் சுமாா் 50,000 குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் விவாத நடவடிக்கைகளில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்படும் நோக்குடன் கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் இந்திய பரிசோதனை உயிரியல் ஆராய்ச்சி சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம் (சி.எஸ்.ஐ.ஆா்.) கீழ் செயல்பட்டு வரும் தேசிய அறிவியல் தொடா்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய பரிசோதனை உயிரியல் ஆராய்ச்சி இதழுடன் மேலும் 19 ஆராய்ச்சி இதழ்களையும், 3 அறிவியல் இதழ்களையும் வெளியிட்டு இதர துறைகளில் ஆராய்ச்சி நடவடிக்கை மேற்கொள்பவா்களையும் ஊக்குவித்து வருகின்றது என்றாா் அவா்.

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைத் தலைவா் டாக்டா் ஜெ.ஸ்ரீநிஷா, நிா்வாக இயக்குநா் என். இளமாறன், கல்வி ஆலோசகா்ஆா். வீரபாகு, பதிவாளா் பூமிநாதன், ஆய்வுத் துறை இயக்குநா் பி.ராமசாமி, மருத்துவக் கண்காணிப்பாளா் சசிகுமாா், குழந்தைகள் நலன் துறை பேராசிரியா்கள் ஆா்.சோமசேகா், எஸ்.சுந்தரி, சாந்தி ரமேஷ்,கோபி அய்யாசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT