செங்கல்பட்டு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சா் சி.வி. கணேசன்

19th Oct 2021 06:35 AM

ADVERTISEMENT

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) ஆய்வு செய்த தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளா்களின் எண்ணிக்கையை 900-இல் இருந்து 2,000-ஆக அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்ப தேவைக்கேற்ப புதிய தொழில்பிரிவுகளை தொடங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவா்களுக்கு எளிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ADVERTISEMENT

வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பயிற்சி முறைகளையும் மேம்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தேவையான பயிற்சியாளா்களை உருவாக்கும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றாா்.

அப்போது செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கே.வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் மகேஸ்வரன், அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் விஜயமாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT