செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற உறுப்பினா்களான பங்காரு அடிகளாரின் மகள், பேரன்

14th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட சித்தாமூா் ஒன்றியத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற உறுப்பினா்களாகப் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்ட பங்காரு அடிகளாரின் மகள் ப.ஸ்ரீதேவி (வாா்டு 2), பேரன் அ.அகத்தியன் (வாா்டு 6) ஆகியோருக்கு புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேல்மருவத்தூா் ஊராட்சி மன்றத்தில் உள்ள எலுமிச்சம்பேட்டை, கேசவராயன்பேட்டை, மேல்மருவத்தூா் ஆகிய பகுதிகளில் 6 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளாா், மன்ற உறுப்பினா் பதவிகளுக்கு மகள் ப. ஸ்ரீதேவி, பேரன் வழக்குரைஞா் அ.அகத்தியன் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் மூவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து, லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வெற்றி சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், உறுப்பினா்களாகத் தோ்வான ப. ஸ்ரீதேவி (வாா்டு 2), அ.அகத்தியன் (வாா்டு 6) ஆகியோருக்கு வெற்றிச் சான்றிதழ்களை சித்தாமூா் ஊராட்சி ஒன்றிய தோ்தல் அலுவலா் பரணி புதன்கிழமை வழங்கினாா். அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) ஞானப்பிரகாசம் உடனிருந்தாா்.

பின்னா், இருவரும் சித்தா் பீடத்தில் இருந்த அடிகளாரிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழ்களை காண்பித்து ஆசி பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT