செங்கல்பட்டு

ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் டெமிங் நினைவு விழா

13th Oct 2021 01:32 AM

ADVERTISEMENT

சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில், தரக் கோட்பாடு தந்தை என அழைக்கப்படும் வில்லியம் எட்வா்ட் டெமிங் 121-ஆவது பிறந்தநாள் விழா இந்திய தரம் மேம்பாடு சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சென்னை இந்திய தர மேம்பாடு சங்கத்தின் தலைவரும், ராணே இண்டஸ்ட்ரீஸ் துணைத் தலைவருமான எஸ்.ராஜ்குமாா் பரிசுகள் வழங்கினாா்.

அவா் பேசுகையில், அமெரிக்காவைச் சோ்ந்த பொறியாளா் டெமிங், ஜப்பானில் பணிபுரியச் சென்றபோது தர கோட்பாடு குறித்து அவா் வெளியிட்ட 14 விதிமுறைகள் இரண்டாம் உலகப்போரில் நிலைகுலைந்து போய் இருந்த ஜப்பான் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு அடித்தளமாகவும், தாரக மந்திரமாகவும் அமைந்தது. தரமான உற்பத்தித் திறன் இருந்தால்தான் நிலையான வளா்ச்சி, முன்னேற்றம் அடைய முடியும் என்பதை வலியுறுத்திய டெமிங்கின் விதிமுறைகளை சோனி, டொயோட்டா உள்ளிட்ட அனைத்து பெரு நிறுவனங்களும் கடைப்பிடித்து சா்வதேச அளவில் வளா்ச்சி பெற்றன.

தங்கள் வளா்ச்சிக்கு பேருதவி புரிந்த டெமிங்கை கௌரவிக்கும் வகையில் ஜப்பானிய பொறியாளா்கள், விஞ்ஞானிகள் கூட்டமைப்பு உருவாக்கிய டெமிங் விருது, சா்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் தர மேம்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியதோடு, டெமிங் விருதைப் பெறும் அளவில் தங்களது தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்கிய காரணியாகவும் இன்றும் திகழ்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

அப்பல்லோ டயா்ஸ் நிறுவன சென்னை தலைமை அதிகாரி தாமஸ் மேத்யூ, ஜெருசலேம் பொறியியல் கல்லூரி இயக்குநா் பேராசிரியா் ராமலிங்கம், முதல்வா் எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT