செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை காலதாமதம்

12th Oct 2021 06:11 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலதாமதம்: மந்தமாகவும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதால் விறுவிறுப்பு இல்லாமல் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் அனைத்து வாக்கு மையங்களிலும் காலதாமதம் ஆனால் சலசலப்பும் வாக்குவாதம் ஏற்பட்டது. சாலைகள் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்வதற்காக பல்வேறு கட்சிகளை அவர்களும் சுயேச்சையாக நின்று அவர்களும் ஆங்காங்கே கூட்டமாக காணப்பட்டனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் முக கவசம் இல்லாமல் இருப்பதை காணலாம்.

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு வழியின்றி இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கார்கள் வரிசையாக நிற்பவை காணலாம்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே காத்துக்கிடப்பதை காணலாம்.

வாகனங்கள் வரிசையாக நின்றதால் ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் காலதாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியதால் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் என 195 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,
மொத்தமாக 3013 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திருக்கழுக்குன்றம் ஒன்றிய வாக்கெண்ணும் பணி 10.30 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதைப்போல் திருப்போரூர் ஒன்றியம் வாக்கு எண்ணும் மையத்தில் 12 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதேபோல் மதுராந்தகம் ஒன்றியத்தில் 12 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதேபோன்று அனைத்து பாக்கியம் மையங்களிலும் காலதாமதமாக வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததாகவும் வாக்குவாதமும் சலசலப்பு ஏற்பட்டது. சாலையில் காத்துக் கிடந்த பல்வேறு கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டமாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களுடன் வந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது.

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு வழியின்றி இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கார்கள் வரிசையாக நிற்பவை காணலாம்

வாக்கெண்ணும் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடமின்றி கார்கள் இருசக்கர வாகனம் என வரிசையாக நின்றதால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்பும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அனைத்து வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  மையங்களுக்கு நேரடியாகச் சென்று போக்குவரத்தை சரி செய்வதிலும் சாலைகளில் நிற்பவர்களை அப்புறம் படுத்துவதிலும் ஈடுபட்டு எந்தவித பிரச்சினையும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

முக்கியமாக வாக்கு எண்ணும் மையங்களில் கரரோனா பாதிப் அச்சமின்றி வாக்கு எண்ணும் அலுவலர்கள் முக கவசம் இன்றி வாக்குகளை எண்ணிக் கொண்டிருந்தனர். அதேபோல் கட்சியினரும் , ஏஜெண்ட்களும் பெரும்பாலானோர் முக கவசம் வாக்கு எண்ணும் மையங்களில் உலா வந்தனர்.

Tags : Local body Election TN Election செங்கல்பட்டு Local election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT