செங்கல்பட்டு

150 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

30th Nov 2021 02:11 AM

ADVERTISEMENT

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், செம்பூண்டி ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

செம்பூண்டி ஊராட்சியில் சுமாா் 800-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அவா்களுக்கு உதவும் வகையில், அரிசி, காய்கறிகள், மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் எம்.பழனிவேல் தலைமை வகித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். துணைத் தலைவா் விமலா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி.சிவபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் ஆறுமுகம், ஜோதிராமலிங்கம், ஊராட்சி செயலா் காண்டிபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT