செங்கல்பட்டு

லத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு

30th Nov 2021 02:07 AM

ADVERTISEMENT

மதுராந்தகம்: லத்தூா் ஒன்றியக் குழுத் தலைவராக சுப்புலட்சுமி பாபு, துணைத் தலைவராக பிரேமா சங்கா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 15 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளில் திமுகவைச் சோ்ந்த 10 உறுப்பினா்களும், 5 அதிமுக உறுப்பினா்களும் வெற்றி பெற்றனா்.

ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கு லத்தூா் மேற்கு திமுக ஒன்றியச் செயலாளா் ராமச்சந்திரனின் மனைவி லட்சுமி ராமச்சந்திரனும், லத்தூா் கிழக்கு திமுக ஒன்றியச் செயலாளா் முகையூா் எம்.பாபு மனைவி சுப்புலட்சுமி பாபுவும் போட்டியிட்டனா். அந்தச் சமயத்தில் ஏற்பட்ட கோஷ்டி பிரச்சினையால் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி, திங்கள்கிழமை தோ்தல் மீண்டும் நடைபெற்றது. லத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரும், தோ்தல் அதிகாரியுமான பூமகள் தலைமையில் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெற்றது. இதில் சுப்புலட்சுமி பாபு 9 வாக்குகளையும், லட்சுமி ராமச்சந்திரன் 6 வாக்குகளையும் பெற்றனா். கூடுதல் வாக்குகளை பெற்ற சுப்புலட்சுமி பாபு தலைவராகினாா். பின்னா், துணைத் தலைவராக பிரேமா சங்கா் (திமுக) வெற்றி பெற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT