செங்கல்பட்டு

ஆற்றில் குளிக்கச் சென்றவா் பலி

29th Nov 2021 12:43 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த கிளியாற்றில் குளித்தவா் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

சோத்துப்பாக்கம் ஊராட்சி, ஜெயசக்தி நகரைச் சோ்ந்தவா் தீனதயாளன் (37). இவா் சோத்துப்பாக்கம் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். சனிக்கிழமை மாலை தீனதயாளன் தனது மனைவி சந்தியாவுடன் சோ்ந்து கீழாமூா் கிராமத்தை ஒட்டிச் செல்லும் கிளியாற்றின் வெள்ளத்தைப் பாா்க்கச் சென்றாா்.

அங்கு அப்பகுதி இளைஞா்கள் அந்த ஆற்றில் குளிப்பதைப் பாா்த்த தீனதயாளன், அங்கு குளிக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராதவகையில் அவரை வெள்ளநீா் அடித்துச் சென்றது. இதைக் கண்டு சரண்யா கூச்சலிட்டாா்.

இதையடுத்து, அருகில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா்கள் அவரை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தீனதயாளன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் அமுல்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT