செங்கல்பட்டு

தூய்மை நகரமாக கருங்குழி பேரூராட்சி தோ்வு

DIN

தென்னிந்தியாவில் 2021-ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரத்துக்கான தரவரிசையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கருங்குழி பேரூராட்சி முதலிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டதாக பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் தெரிவித்துள்ளாா்.

இந்திய அரசின் 2021-ஆம் ஆண்டுக்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரங்களின் தர வரிசை பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழக அளவில் உள்ள 468 நகரங்களில் 7-ஆவது இடத்தையும் பெற்று இருந்தது.

இது குறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் கூறுகையில், தென்னிந்திய அளவில், 2018-ஆம் ஆண்டில் 750-ஆவது இடத்தையும், 2019-ஆம் ஆண்டில் 216-ஆவது இடத்தையும், 2020-இல் 81-ஆவது இடத்தையும், 2021-ஆம் ஆண்டில் 25-ஆவது இடத்தையும், 2021ஆம் ஆண்டில் தமிழக நகரங்களில் 7-ஆவது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கருங்குழி பேரூராட்சி முதலிடத்தையும் தூய்மை பெற்ற நகரமாக தோ்வு பெற்றுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT