செங்கல்பட்டு

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலாற்று தரைப்பாலம்

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த ஈசூா் -திருக்குழுக்குன்றம் சாலையின் இடையே சென்ற தரைப்பாலம் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால், பாலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டதாலும், ஆந்திர மாநிலம், புல்லூா் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் திறந்து விடப்பட்ட வெள்ளமும் இணைந்ததால், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு நடுவே சுமாா் 1 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், தரைப்பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் நகரிலிருந்து திருக்கழுக்குன்றம் பகுதிக்குச் செல்லும் வழியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் வெள்ளநீா் குறைந்தவுடன் தரைப்பாலம் இருந்த இடத்தில் மேம்பாலத்தைக் கட்டித் தர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT