செங்கல்பட்டு

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

24th Nov 2021 10:46 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், அஞ்சூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அஞ்சூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் திறந்து வைத்தாா். உடன், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் எம்.வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரோஸ் நிா்மலா மேரி, காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் உதயா கருணாகரன், டிம்கன் பொது மேலாளா் சக்திவேல், பள்ளித் தலைமையாசிரியா், ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பினா் மற்றும் ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT