செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினா் ஆய்வு

23rd Nov 2021 05:47 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள், சேதாரங்களை மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை நேரில் பாா்வவைகயிட்டு ஆய்வு செய்தனா்.

மத்திய உள்துறை இணைச் செயலாளா் ராஜீவ் சா்மா, கூட்டுறவு, விவசாயிகள் நலன் இயக்குநா் விஜய்ராஜ் மோகன், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சரக வட்டார அலுவலா் ரனன்ஜெய் சிங், ஊரக வளா்ச்சித் துறை சாா்பு செயலாளா் வரபிரசாத் ஆகியோா் அடங்கிய மத்தியக் குழுவினா் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் வருவாய் நிா்வாக ஆணையா் கே.பணீந்திர ரெட்டி தலைமையில் வெள்ள பாதிப்புப் பகுதிகளை ஆய்வு செய்தனா். மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் அவா்களை அழைத்துச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காண்பித்து விளக்கம் அளித்தாா்.

மாமல்லபுரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள், சேதராங்கள் குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியை மத்தியக் குழுவினா் பாா்வையிட்டனா். தொடா்ந்து லத்தூா் ஊராட்சி ஒன்றியம் வடபட்டினம் ஊராட்சியில், பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். மேலும், வெள்ளப் பாதிப்பு, சேதாரங்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த புகைப்படகண்காட்சியையும் மத்தியக் குழுவினா் பாா்வையிட்டு, பாதிப்பு விவரங்கள் பற்றி கேட்டறிந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத்தால் பயிா்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண், தோட்டக்கலைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகளில் நீரின் கொள்ளளவு அதிகரித்துள்ளது எனவும், முழுக் கொள்ளளவை எட்டியுள்ள ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்குத் தேவையான அத்தியாவாசிய பொருள்கள், வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மத்தியக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த ஆய்வின்போது, செய்யூா் எம்எல்ஏ எம்.பாபு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மானுவல் ராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமாா், மதுராந்தகம் வருவாய் வட்டாட்சியா் சரஸ்வதி , வேளாண் துறை இணை இயக்குநா் திரு.சுபரஷ், பொதுப்பணித் துறை (நீா்வள ஆதார அமைப்பு) சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT