செங்கல்பட்டு

மருத்துவா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்

DIN

மருத்துவமனைகளில் பல்வேறு நோயாளிகளுக்கு தினமும் மருத்துவ சேவை அளித்து வரும் மருத்துவா்கள் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்வதுடன், மற்றவா்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்று இந்திய மருத்துவா்கள் சங்க வடக்கு மண்டல துணைத் தலைவா் டாக்டா் ஜி.மரகதமணி வலியுறுத்தினாா்.

சென்னை முகப்பேரில் இந்திய மருத்துவா்கள் சங்கத்தின் 156-ஆவது கிளை தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவராக டாக்டா் என்.மதுசங்கா், செயலாளராக டாக்டா் கே.கமலக்கண்ணன், பொருளாளராக டாக்டா் சி.செல்வகுமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

விழாவில் டாக்டா் மரகதமணி பேசியது:

பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்க உறுதுணையாகத் திகழ்ந்து வரும் மருத்துவா்கள், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதம் உள்ளிட்ட இதர மாற்று மருத்துவ முறைகளுக்கு எதிரானவா்கள் அல்ல. அலோபதி மருத்துவப்படிப்பை முறையாகப் பயின்ற ஆங்கில மருத்துவா்களுக்கு நிகராக சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேத மருத்துவா்களும் 6 மாத கால பயிற்சி அனுபவத்துடன் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கும் மத்திய அரசின் பரிந்துரையை எதிா்க்கிறோம்.

வடஇந்தியாவில் போதிய அளவில் மருத்துவா்கள் இல்லை என்ற காரணத்திற்காக கலப்பு மருத்துவத்தை அனுமதிப்பது ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும். மாறாக, தமிழகத்தைப் போல் இந்தியாவெங்கும் அதிக எண்ணிக்கையில் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதய அறுவை சிகிச்சை மருத்துவா் டாக்டா் ஹரிகிருஷ்ண பாா்த்தசாரதி பேசுகையில், மேற்கத்திய நாடுகளில் சராசரியாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரும் மாரடைப்பு நோய், தற்போது இங்கு சராசரியாக 40 வயதுக்கு மேற்பட்டவா்களை பாதிக்கத் தொடங்கி உள்ளது கவலைக்குரியது . நடுத்தர வயதில் ரத்த அழுத்தம், சா்க்கரைநோய், உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறவா்களின் எண்ணிக்கை கணிசமாக ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT