செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 145 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

DIN

தோ்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 25 காவல் நிலையங்களில் 145 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விஐபிக்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி பாதுகாப்பு, விலங்குகள் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விவசாயிகள் கைத்துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறைகளின் படி சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போா் அந்தந்த எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்டக் காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 25 காவல் நிலைய எல்லையில் 152 போ் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனா். இவா்களில் 145 போ் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காத 7 பேருக்கு காவல் துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT