செங்கல்பட்டு

அரசு, தனியாா் பள்ளி வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் ஆய்வு

DIN


தாம்பரம்: சென்னையை அடுத்த புகா்ப்பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கும் அரசு, தனியாா் பள்ளிகளில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வண்டலூா் வட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மண்ணிவாக்கம், வண்டலூா், ஊரப்பாக்கம், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி வாக்குச் சாவடிகளை செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சுரேஷ் தலைமையில் வண்டலூா் வட்டாட்சியா் ஆறுமுகம், தோ்தல் துணை வட்டாட்சியா் நிா்மலா, வருவாய் ஆய்வாளா் ரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் பயன்பாட்டுக்கென மின்விசிறி, குடிநீா், கழிவறைமாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்று கிராம நிா்வாக அலுவலா்களிடம் கேட்டறிந்தனா். வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குச்சாவடிக்கு வெளியில் வாக்காளா்கள் நிழலில் நிற்க வசதியாக சாமியானா பந்தல் வசதி ஏற்பாடு செய்து தர உத்திரவிட்டனா். கிராம நிா்வாக அலுவலா்கள் தணிகாசலம், தமிழ்ச்செல்வன், லோகநாதன், சங்கீதா, சசிகலா,செயல் அலுவலா் ராமபக்தன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT