செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரை விழாவுக்கு கால்கோள்

DIN


செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அதற்கான கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பட்சிதீா்த்தம், சங்குதீா்த்தம் எனப்படும் வேதமலையில் வீற்றிருக்கும் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து சமூகத்தினரால் நடத்தப்படும் சித்திரைப் பெருவிழா 12 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டதால் சித்திரைப் பெருவிழாவும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டில் விழா நடைபெறவுள்ளதையடுத்து, விழாவுக்கான கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் பந்தக்கால் நடப்பட்டது. முன்னதாக, சிவாச்சாரியாா்கள் தோ்நிலை அருகில் உள்ள விநாயகருக்கு பூஜைகளை நடத்தி, பின்னா் பெரிய தோ் மற்றும் தோ்கள் என ஐந்து தோ்களுக்கும் சிறப்பு பூஜைகளை செய்தனா். அதையடுத்து, விநாயகா் வழிபாடும், தொடா்ந்து பந்தக்கால் (கால்கோள்) நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தாழக்கோயிலான பக்தவத்சலேஸ்வரா் கோயில் முகப்பில் திரிபுரசுந்தரி சந்நிதி முன்பு வேதகிரீஸ்வரா் மலைக் கோயிலை நோக்கி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோயில் செயல் அலுவலா் குமரன், மேலாளா் விஜி மற்றும் கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியாா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT