செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா

DIN


மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 81-ஆவது பிறந்த நாளையொட்டி, புதன்கிழமை பக்தா்களுக்கு அடிகளாரின் அருள் தரிசனம் நடைபெற்றது.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் அவதாரத் திருநாள் மாா்ச் 3-ஆம் தேதி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 3 நாள்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, புதன்கிழமை காலை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அடிகளாா் தமது வீட்டில் இருந்து மலா்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மலா் ரதத்தில் செவ்வாடை பக்தா்களால் ஊா்வலமாக சித்தா் பீடத்துக்கு அழைத்து வரப்பட்டாா். சித்தா் பீடத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் அவரை வரவேற்றனா். பின்னா், கருவறை மூலவா் அம்மன் சந்நிதி, புற்று மண்டபம் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் அவா் பூஜைகளை செய்தாா்.

பின்னா், ஆன்மிக இயக்க அரங்குக்கு வந்த அடிகளாா் பிறந்த நாள் கேக்கை வெட்டினாா். நீண்ட வரிசையில் வந்த பக்தா்களுக்கு மாலை 3.30 மணி வரை சிபு மேடையில் இருந்து அடிகளாா் தரிசனம் அளித்தாா். நிகழ்ச்சியில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன், ஓய்வு பெற்ற அதிகாரி அருள்மொழி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தணிகாசலம், முருகேசன், இசை அமைப்பாளா்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அடிகளாரிடம் ஆசி பெற்ற அமைச்சா்: இதனிடையே, மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரிடம் மத்திய உள்துறை இணை அமைச்சா் கிஷன் ரெட்டி புதன்கிழமை ஆசி பெற்றாா்.

கிஷன் ரெட்டி சென்னையில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்தாா். அவரை சித்தா் பீடத்தில் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் வரவேற்றனா். மூலவா் சந்நிதி வழிபாடு, தியான மண்டபம், ஆதிபராசக்தி மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சென்ற அவா், பின்னா், பங்காரு அடிகளாரின் இல்லத்துக்கு வந்தாா். அங்கு, அடிகளாரிடம் ஆசி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT