செங்கல்பட்டு

செங்கல்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தொண்டை நந்நாடு சான்றோர் உடைத்து என போற்றப்படுவதும் செங்கழுநீர் பூக்கள் எல்லாம் பூத்துக்குலுங்கிய பகுதி என்பதால் செங்கழுநீர்பட்டு என்று அழைக்கப்பட்டு மருவி செங்கல்பட்டு என்று அழைக்கப்படடும் செங்கல்பட்டு நகரத்தின் மையத்தில் ஜீவானந்தம் தெருவும் தெருவில் ஜீவனுக்குள் சத்தியாய் அங்கம் அதை ஆளும் காளியாய் தாயாய் வருவோருக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கும் அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. 

இக்கோயில் கோயில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்தனர்.இதையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோயிலில் புதிதாக ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ முருகர் வள்ளி தெய்வயானை, ஸ்ரீ வீரபத்திரன், ஸ்ரீ மச்சக்கன்னி, ஸ்ரீ நாகேஸ்வரி ஆகிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை கரிக்கோலம் வீதிகளின் எல்லைகளுக்கு வீதி உலா நடைபெற்றது. 

பிரவேசபலி வாஸ்துசாந்தி யாகசாலை அலங்காரம் முதல் கால பூஜை யாகசாலை பூஜையும் பிம்பசுத்தி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ,நாடி சந்தானம் பாலா தரிசனம் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. இதனை அடுத்து திங்கள்கிழமை காலை பூஜை விசேஷ திரவிய ஹோமம் விசேஷ சாந்தி கும்ப அலங்காரம், விசேஷ திரவிய ஹோமம் இரண்டாம் கால பூஜை, கும்ப கலசங்கள் புறப்பாடு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரசாதம் விநியோகம் நடைபெற்றது.

இதனையடுத்து அம்மனுக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளிதாசன் பருவதராஜகுல மரபினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT