செங்கல்பட்டு

குடியரசு தினம்: மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரியில் 4 சுதை சிற்ப சிங்கத்துடன் பீடம்

24th Jan 2021 07:20 PM

ADVERTISEMENT

குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்ற மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் 4 சுதைச் சிற்ப சிங்கத்துடன் கூடிய பீடத்தை அமைப்பு: இறுதி ஆண்டு மாணவர்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் சிற்பக்கலைக்கல்லூரியில் இதுவரை கொடி கம்ப வசதி இல்லாததால் குடிரயரசுத்தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இக்கல்லூரியின் கட்டடத்தின் மேல் தேசிய கொடியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் இக்கல்லூரியில் சுதை சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை பிரிவில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் இணைந்து கல்லூரி படிப்பை நிறைவு செய்ய உள்ள தாங்கள், தங்களின் நினைவாக இக்கல்லூரியின் முகப்பில் வருகிற குடியரசுத் தினத்தன்று(செவ்வாய்கிழமை) 24 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைப்பதற்காக 4 சுதைசிற்பங்களுடன், கோயில்களில் அமைக்கப்படும் உபபீட அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய கொடி கம்ப பீடத்தை அழகுர வடிவமைத்து வண்ணம் தீட்டி உள்ளனர்.  

வருகிற செவ்வாய்கிழமை அன்று குடியரசுத் தினத்தன்று கலை அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கொடி கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. வருங்கால சிற்பிகளாக உருவாக உள்ள மாணவர்களின் கலைத்திறனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கொடி கம்ப பீடம் பார்ப்போரை ரசிக்க தூண்டும் வகையில் வித்தியாசமான முறையில் கலை நயத்துடன் தமிழகத்திலேயே முதன், முதலாக ஒரு அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 

ADVERTISEMENT

Tags : Chengalpattu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT