செங்கல்பட்டு

3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

10th Feb 2021 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் தொகுதிக்கு உள்பட்ட மெய்யூா், அரியனூா், நீா்பெயா் ஆகிய 3 கிராமங்களில் சுகாதாரத் துறையின் சாா்பில், அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகத்தில் நடைபெற்ற அம்மா சிறிய மருத்துவமனைகள் திறப்பு நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் பிரியா வரவேற்றாா். முன்னாள் எம்.பி. காஞ்சிபுரம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் கே.மரகதம் குமரவேல் தலைமை வகித்து, அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தாா். பின்னா், 15-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகத்தை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா்கள் கோ.அப்பாதுரை(மதுராந்தகம் வடக்கு), காா்த்திகேயன் (மதுராந்தகம் தெற்கு), அதிமுக நிா்வாகிகள் விஜயபாஸ்கா், பக்தவத்சலம், கிருஷ்ணன், சுந்தரமூா்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் அரியனூா் ஜெயசந்திரன், கீழ்காண்டை சண்முகம், பாக்கம் மாசி மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT