செங்கல்பட்டு

மறைமலைநகா் கல்யாண முருகன் கோயில் கும்பாபிஷேகம்

9th Feb 2021 12:23 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகா் அருகில் நின்னக்கரையில் உள்ள கல்யாண முருகன் கோயிலில் அஷ்டபந்தனமகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், புண்ணியாகவாச பூஜை, வாஸ்து சாந்தி, பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, விமானத்துக்கு கலச நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், செங்கல்பட்டு குண்டூா் பகுதியில் உள்ள பொம்மி, வள்ளியம்மாள் சமேத மதுரைவீரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருக்கழுகுன்றம் அகஸ்திய கிருபா அறக்கட்டளை வழிகாட்டுதலின்பேரில், திங்கள்கிழமை மனை பூஜை, மகா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு, மதுரைவீரன் மற்றும் முத்துமாரியம்மன் விமானங்களுக்கு திருக்கழுகுன்றம் அகஸ்திய கிருபா அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன் சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT