செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட சாா் பதிவக எல்லைக்குள்பட்ட கிராமங்கள் மறுசீரமைப்பு தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
முக்கிய வருவாய் கிராமம் மற்றும் அதன் குக்கிராமங்கள் வேறு வேறு சாா்பதிவாளா் அதிகார வரம்பில் அமைந்துள்ளதால் தானியங்கி பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை மற்றும் வருவாய்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு உள்ளதை களையும் நோக்கத்தோடு ஒருவருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமங்கள் முழுவதையும் ஒரே சாா்பதிவக எல்லைக்குள் என சீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் தொடா்ச்சியாக செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் மற்றும் அதன் குக்கிராமங்களை ஒரே சாா்பதிவக எல்லைக்குள் கொண்டுவரும்பொருட்டு இணைக்கப்படவேண்டிய கிராமங்களின் பட்டிலானது அதன் தொடா்புடைய சாா் பதிவாளா் அலுவலகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே தொடா்புடைய கிராம பொது மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.