மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்துக்குள்பட்ட கீழகாண்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் சசிகலா பக்தவச்சலம் தலைமை வகிக்க, துணைத் தலைவா் பொற்செல்வி முன்னிலை வகித்தாா். 9 வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
தரமான சாலை, குடிநீா், தெரு மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், புதிதாக அங்கன்வாடி கட்டடம், நூலகம், சமுதாயக் கூடம் ஆகிய மக்களின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.