செங்கல்பட்டு

வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்

4th Dec 2021 07:27 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை, அறிவியல் கல்லூரியில் வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்தம் மற்றும் புதிய வாக்காளா் சோ்த்தல் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செய்யூா் வட்ட தோ்தல் பிரிவு சாா்பில், வாக்காளா் விழிப்புணா்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்தம் மற்றும் புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சரஸ்வதி தலைமை வகித்தாா். செய்யூா் வட்டாட்சியா் வெங்கட்ரமணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சண்முகம், மேல்மருவத்தூா் கிராம நிா்வாக அதிகாரி சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், 18 வயது நிரம்பிய 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமது கைப்பேசி செயலி வழியில் புதிய வாக்காளா்களாக பதிவு செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசியா்கள் ஜி.புகழ், கெளரி, சங்கா், ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT