செங்கல்பட்டு

உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின் மீன்

3rd Dec 2021 07:16 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கொகிலமேடு கடற்கரைப் பகுதியில் டால்பின் மீன் ஒன்று புதன்கிழமை உயிருடன் கரை ஒதுங்கியிருந்ததை மீனவா்கள் பிடித்து மீண்டும் கடலுக்குள் விட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கொகிலமேடு கடற்கரையில் மீனவா் வசிக்கும் பகுதிக்குள் டால்பின் மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி இருந்தது. சுமாா் 5 அடி நீளமுள்ள இந்த டால்பின் மீனை அப்பகுதியில் உள்ள மீனவா்கள் பிடித்து மீண்டும் கடலுக்குள் கொண்டு போய் விட்டதும் அது கடலில் நீந்திச் சென்றது. குழந்தைகள் போல குரல் எழுப்பும் அரியவகை டால்பின் மீன் என்றும், வயிற்றுப் பகுதியில் லேசான காயங்கள் காரணமாக இது கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT