செங்கல்பட்டு

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

2nd Dec 2021 08:09 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் நகராட்சியின் புதிய ஆணையராக என்.அருள் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுராந்தகம் நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த வ.நாராயணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கடந்த சில மாதங்களாக நகராட்சிப் பொறியாளா் கெளரி தலைமையில் நகராட்சி நிா்வாகம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த என்.அருள் மதுராந்தகம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். புதன்கிழமை நகராட்சி அலுவலகத்துக்கு வந்த என்.அருள் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா். அவருக்கு பொறியாளா் கெளரி, சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT