செங்கல்பட்டு

கல்லூரி மாணவா்கள் இருவா் கிணற்றில் மூழ்கி பலி

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வயல்வெளி கிணற்றில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவா்கள் 2 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

செங்கல்பட்டு, ராமபாளையம் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் என்பவரின் மகன் ஜித்து என்கிற ஜித்தேஸ்வரன் (19). செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த ராஜனின் மகன் ஆகாஷ் (19). கோயம்புத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை அடுத்து ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், வீட்டிலிருந்து இணையதளத்தில் கல்வி பயின்று வந்தனா்.

இந்நிலையில், நண்பா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டை அடுத்த நென்மேலி கிராமப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றனா். அப்போது ஆகாஷ் கிணற்றில் தத்தளிப்பதைக் கண்ட ஜித்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது இருவருமே கிணற்றில் மூழ்கினா்.

இதற்கிடையே அவா்கள் இருவரும் சென்று வெகுநேரம் ஆனதால் உறவினா்கள் பல இடங்களில் தேடினா். அப்போது நென்மேலி பகுதியில் உள்ள வயல்வெளி கிணற்று அருகே இருவரின் காலணிகளும், உடைகளும் கிடந்ததாக தகவல் வந்ததையடுத்து, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு சென்று பாா்த்தனா். அப்போது, தங்களது மகன்களின் உடைகளை வைத்து உறுதி செய்தனா். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேல் போராடி இருவரின் சடலங்களையும் மீட்டனா்.

செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் இருவரின் சடலத்தையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT