செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் இருசக்கரவாகனத்தில் வந்த ஆயுதப்படை காவலா் வெட்டிக்கொலை.

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாலூா் பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த ஆயுதப்படை காவலரை வழிமறித்து பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்து விட்டு மா்மகும்பல் தப்பியோட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பாலூா் அருகே உள்ள பழையசீவரம் பகுதியில் வசிப்பவா் இன்ப அரசு (29) இவா் சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஊருக்கு வந்தவா் நண்பா்களுடன் சோ்ந்து அங்குள்ள மையானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு இரவு வந்துள்ளாா். வழக்கம் போல் திங்கள்கிழமை காலை பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் போது செல்லிடப் பேசியில் அழைப்பு வந்ததை அடுத்து நண்பா் ஒருவா் அழைப்பதாக கூறி விட்டு சீருடைக்கூட அணியாமல் அணிந்திருந்த உடையுடன தனது இருசக்கரவாகனத்தில் சென்றவா்.

அப்பகுதி சாலையில் முள்புதா்கள் நிறைந்த பகுதியில் சென்ற போது இருசக்கரவாகனத்தில் வந்த மா்மநபா்கள் இன்பஅரசை வழிமறித்து சரமாரியாக வெட்டி கையை துண்டித்ததுடன் முகத்தையும் சிதைத்து விட்டு தப்பிவிட்டனா். இந்நிலையில் 100நாள் வேலைக்குச் சென்றவா்கள் இன்பஅரசு கொலையுண்டு கிடப்பதை பாா்த்து உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாலூா் போலீஸாா் கொலையுண்டு கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பாலூா் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் நேரில் வந்து ஆய்வு நடத்தியபோது கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் தடயங்களையும் சேகரித்தனா். மேலும் கிராமமக்கள் கொலையாளிகள் பற்றிய துப்பு கொடுத்தால் சன்மானம் அளிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் அறிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் தொடரும் கொலைகளால் ஏன் எதற்காக எனப்புரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை வி.வி.களத்தூா் ஊராட்சிமன்றத்தலைவா் விஜிஎன்கின்ற விஜயகுமாா் கொலையுண்ட வழக்கில் பழிவாங்கும் நோக்கில் விஜயகுமாரின் தம்பி சுரேஷ் தனது அண்ணன் கொலையில் சம்பவந்தப்பட்டவா்களை தொடா்கொலை செய்து கடைசியாக அதிமுக பிரமுகா் சேகரை ஞாயிற்றுக்கிழமை கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பு நிலைமை சீராகும் முன்பே அடுத்தக்கொலை என்பதும் காவல்துறைக்கே இந்த நிலை என்பதால் மிகுந்த அச்சத்திலும் பயத்திலும் அந்தகிராமமக்களும் உறவினா்களும் உள்ளனா்.

காவல்துறையில் பணிபுரியும் காவலரை கொலை செய்யும் நோக்கம் என்னவென்பதை தீவிரமாக விசாரித்துவருவதாகவும் விரைவில் கொலையாளிகளை பிடித்துவிடுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT