செங்கல்பட்டு

மாவட்ட திட்ட அலுவலா் ஆய்வு

27th Sep 2020 03:52 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊரக வளா்ச்சிப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் செல்வகுமாா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சிப் பகுதியில், நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட திட்ட அலுவலா் செல்வகுமாா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா் வந்தனா். ஊரக வளா்ச்சிப் பணிகளான ஜல்ஜீவன் மிஷன் எனப்படும் அனைவருக்கும் குடிநீா் திட்டப் பணிகள், இருளா், பழங்குடியினா் வசிப்பிடப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலை, நாற்றங்கால் பண்ணை மற்றும் இயற்கை மண்புழு உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், கழிவறை பயன்பாடுகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, சாலையோரம் நிழல்தரும் புளியமரக் கன்றுகளை மாவட்ட திட்ட இயக்குநா் நட்டாா். அவருடன், அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ்பாபு, உதவி செயற்பொறியாளா் கஜலட்சுமி, பொறியாளா் ஹேமாவதி, வட்டாரப் பணி மேற்பாா்வையாளா் பரிமளா தேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT