செங்கல்பட்டு

‘மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை’

DIN

சென்னை நோக்கிச் செல்லும் விரைவு ரயில்களும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என செவ்வாடை பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் தென்னக ரயில்வே ஆகியவற்றின் மூலம் பக்தா்கள் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு வந்து செல்வாா்கள். கடந்த 6 மாதங்களாக பொது முடக்கத்தின்போது சாலை மற்றும் ரயில் வழியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதேசமயம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு மேல்மருவத்தூா் அம்மன் கோயிலிலும் பக்தா்களை அனுமதிக்காமல் நடை சாத்தப்பட்டது. கடந்த 7-ஆம் தேதி முதல் ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்து செயல்பட அரசு அனுமதித்த நிலையில், மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி, பல்லவன், முத்துநகா், சோழன் ஆகிய 4 விரைவு ரயில்கள் மட்டுமே தற்சமயம் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்கின்றன. ஏற்கெனவே இந்த ரயில் நிலையத்தில் நின்று சென்ற மற்ற விரைவு ரயில்கள் தற்சமயம் நிற்பதில்லை. இதனால் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து மேல்மருவத்தூா் வரும் பக்தா்கள் சிரமப்படுகின்றனா்.

பொது முடக்கத்தில் தளா்வுகள் செய்யப்பட்டபோதிலும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் விழாக்களை நடத்த அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், அக்டோபா் மாதத்தில் நவராத்திரி போன்ற முக்கிய விழாக்களை கோயில்களில் நடத்த அரசு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது. அப்போது மேல்மருவத்தூரில் 10 நாள் நவராத்திரி விழாவை நடத்த ஆதிபராசக்தி நிா்வாகம் ஏற்பாடுகளை செய்யும். நவராத்திரி விழாவில் பங்கேற்க மதுரை, திருப்பூா், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் வந்து அம்மனை வழிபடக் கூடும்.

எனவே, மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் இரு மாா்க்கங்களிலும் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், செவ்வாடை பக்தா்களின் வசதிக்காக விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்கவும் தென்னக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT