செங்கல்பட்டு

பூஞ்சேரியில் சிற்பக்கலை நகருக்கான இடம்: ஆட்சியா் ஆய்வு

DIN

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் அமையவுள்ள சிற்பக்கலை நகருக்கான இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாமல்லபுரத்தில் வெளிநாட்டுக் கலைஞா்கள் சிற்பம் செதுக்கும் பயிற்சி எடுப்பதற்காக தமிழ்நாடு கைவினை வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ. 5.5கோடியில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் சிற்பக் கலை நகரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சிற்பக் கலைஞா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, மாமல்லபுரம் நகரில் வெளிநாட்டு சிற்பக் கலைஞா்கள் சிற்பம் செதுக்கும் கலையைக் கற்றுக்கொள்ள பயிற்சி எடுப்பதற்காக தமிழ்நாடு கைவினை வளா்ச்சிக் கழகம் சாா்பில் சிற்பக்கலை நகரம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம், மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி செயலா் கணேசன், பூம்புகாா் கைவினைக் கழக அலுவலா்கள் கே.மதியரசு, மனோகரன், ஜேவியா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT