செங்கல்பட்டு

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மகிஷாசுர வத சக்திலீலை

26th Oct 2020 11:47 AM

ADVERTISEMENT

ங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலத்தில் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் சக்திலீலா வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் சகஸ்ரநாம மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. மஹாசண்டி ஹோமத்தையொட்டி தினந்தோறும் கோபூஜைஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் பூஜைகள் நடைபெற்றது. 

ADVERTISEMENT


ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையும் திங்கள்கிழமை விடியற்காலையில் விஜயதசமியை முன்னிட்டு மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்பாள் மகிஷனை வதம் செய்யும் சக்தி லீலா வைபவம் விமர்சியாக நடைபெற்றது. 

மகிஷாசுரனை வதம் செய்யும் அற்புத நிகழ்வை கோயில் ஸ்தாபகர் சுவாமிகள் திருக்கரங்களால் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகிஷனை வதம் செய்யும் காட்சியைக் கண்டு பரவசமடைந்து அம்மனை வழிபட்டனர்.

 

Tags : Chengalpattu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT