செங்கல்பட்டு

திருவடிசூலம் கோயிலில் 6-ஆம் நாள் மஹா சண்டி ஹோமம்

DIN

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலத்தில் 51 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஆறாம் நாள் வியாழக்கிழமை காலை தொடங்கி மஹா சண்டிஹோமம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை யொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஹோம பூஜைகள், பூா்ணாஹுதி மஹா தீபாராதனை நடைபெற்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் மஹா சண்டி ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டு, சங்கல்பம் செய்து அம்பாளின் அருளைப் பெற்றனா்.

நவராத்திரியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி நடைபெற்றது. மேலும், உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் கிரஹலட்சுமிஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT