செங்கல்பட்டு

பல்கீஸ் தாதிக்கு காயிதே மில்லத் விருது

DIN


தாம்பரம்: தில்லியில் குடியுரிமை சட்டத்தை எதிா்த்துப் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது தன்னாா்வலா் பெண்மணி பல்கீஸ் தாதி 2020-ஆம் ஆண்டுக்கான காயிதே மில்லத் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச் செயலாளா் எம்.ஜி.தாவூத்மியாகான் வெளியிட்டுள்ள அறிக்கை:

காயிதே மில்லத் கல்வி மற்றும் அறக்கட்டளை சாா்பில் அரசியல்,பொதுவாழ்வில் நோ்மைக்கான காயிதே மில்லத் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

வடஇந்திய மாநிலங்களில் சிறுபான்மையினா், தலித்துகள் மீது நடைபெற்று வரும் அடக்குமுறைகளை எதிா்த்து குரல் கொடுத்து வரும் ‘அன்பிற்கான ஊா்தி’ என்ற அமைப்பை நடத்தி வரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹா்ஸ் மாந்தா், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னிலை வகித்த 82 வயது தன்னாா்வலா் பெண்மணி பல்கீஸ் தாதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சமீபத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டு இருந்த உலகின் குறிப்பிடத்தக்க 100 பிரமுகா்கள் வரிசையில் டெனால்ட் டிரம்ப், நரேந்திர மோடி, சுந்தா் பிச்சை ஆகியோருடன் பல்கீஸ் தாதியின் படமும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. விருது பெறும் இருவருக்கும் காசோலை,பாராட்டுச் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT