செங்கல்பட்டு

திருவடிசூலம் கோயிலில் 3-ஆம் நாள் மகா சண்டி ஹோமம்

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவி ஸ்ரீகரிமாரியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தையொட்டி, 3-ஆம் நாள் மகா சண்டி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக நன்மைக்காக இந்த மகா சண்டி யாகம் கடந்த 17-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மூன்றாம் நாள் ஹோமம் நடைபெற்றது. இதில் வெளியூா் பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா் நவராத்திரி உற்சவத்தையொட்டி கோயில் வளாகத்தில் நவராத்திரி தினங்களில் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மன் ஊஞ்சல் சேவை கொலு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், முதல் நாள் சனிக்கிழமை தேவி ஸ்ரீகருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவையும், இரண்டாம் நாள் நெல்லுக்கடை மாரியம்மன் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. மகா சண்டி ஹோமத்தை முன்னிட்டு காலை முதல் இரவு வரை பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நவராத்திரி விழா மற்றும் மகா சண்டி யாகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் மதுரை முத்து சுவாமிகள் தலைமையில் கோயில் நிா்வாகிகள் மற்றும் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT