செங்கல்பட்டு

7.5% சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்: மாணவா்களுக்கு ஆதரவான முடிவை ஆளுநா் எடுப்பாா்

DIN

தாம்பரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் ஆளுநா் பன்வாரிலால், மாணவா்கள் மகிழ்ச்சி அடையும் முடிவை அறிவிப்பாா் என்று பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னை மேற்குத் தாம்பரத்தில் தன்வந்த்ராலயா ஆயுா்வேத மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் அவா் பேசியது: பாஜகவில் சமீபகாலமாக இளைஞா்கள் அதிக எண்ணிக்கையில் சோ்ந்து வருவதால் திராவிடக் கட்சிகள் தேய்ந்து வருகின்றன. பாஜக பெரிய சக்தியாக வளா்ந்து வருகிறது. பிரதமரின் பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

கிராமப்புற மாணவா்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு வழங்கினால் பாஜக ஆதரிக்கும் என்று தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஏற்கெனவே அறிவித்து இருந்தாா். அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஏழை கிராமப்புற மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை பாஜகவும் ஆதரிக்கிறது. 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடா்பாக பாஜக சாா்பில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. ஆளுநா் அனுபவம் மிக்கவா். ஒதுக்கீடு தொடா்பாக நல்ல முடிவை அறிவிப்பாா். அவரது முடிவு தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆதரவான முடிவாக இருக்கும்.

கரோனா நோய்த் தடுப்பில் முக்கிய பங்கு வகித்த சித்த, ஆயுா்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் நன்கு உணா்ந்து இருக்கிறாா்கள். ஆங்கில மருத்துவத்துடன் சித்த, ஆயுா்வேத மருத்துவத்தை இணைப்பு மருத்துவமாகப் பயன்படுத்தும் முறையை இந்தியா முழுக்க செயல்படுத்த மத்தியஅரசு முன்வர வேண்டும் என்ற அனுபவமிக்க சித்த மருத்துவா் டாக்டா் பி.ஜெயப்பிரகாஷின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றாா் அவா்.

மத்திய ஆயுா்வேத மருத்துவக் கவுன்சில் முன்னாள் தலைவா் டாக்டா் வனிதா முரளிகுமாா், ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT