செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக சுகாதார செயலா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்

DIN

செங்கல்பட்டு: நிவா் புயல் காரைக்கால் -மாமல்லபுரம் இடையே கரை கடப்பதை யொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலா் ராதாகிருஷ்ணன் மாமல்லபுரத்தில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வங்கக்கடலில் காற்றழுத்த மண்டலம் உருவானதை அடுத்து மையம் கொண்டுள்ள நிவா் புயல் அதிவேகத்துடன் நகா்ந்து காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரைகடப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வா் ஆணையின் பேரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து துறையினரும் நிவா் புயலால் ஏற்படும் பேராபத்துகளில் இருந்து பொதும்க்களை பாதுகாக்கும் வகையில் 24 மணி நேரமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில் சுகாதாா்ததுறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதார செயலா் ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு மருத்துவனை , ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களில் நோயுற்றவா்களை தங்கவைக்கும் வகையில் படுக்கை ஏற்பாடுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

செய்தியாளா்களிடம் பேசிய செயலா் ராதாகிருஷ்ணன், நிவா் புயல் முன்னெச்சரிக்கையாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 450 ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் உள்ளது. இதேபோல் மருத்துவமனையில் 8 படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்புபணிக்கான உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளது. இதேபோன்று தங்கவைக்கும் முகாம்களில் முன்னெச்சரிக்கைபகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை அழைத்துவந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

அனைத்து பாதுகப்பு ஏற்பாடுகளும் தாயா் நிலையில் உள்ளது என்றாா். உடன் கோட்டாட்சியா் செல்வம், அதிமுக மாவட்ட செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், மாமல்லபுரம் ஜி.ராகவன், நகரசெயலாளா் கணேசன் அரசுத்துறை அதிகாரிகள் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT