செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு: கரைதாண்டி குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் உட்புகுந்தது

DIN

செங்கல்பட்டு:  மாமல்லபுரம் கடற்கரையில் புதன் கிழமைகரையைத் தாண்டி கடல் நீா் ஆக்ரோஷத்துடன் காணப்படும் கடல் கொந்தளிப்பால் மீனவ குடியிருப்பு பகுதிக்குள் மேலும் புகுந்து தங்களது உடமைகளை இழந்து தவிக்கும் அவல நிலை உருவாகிவிடும் என்ற மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவா் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாமல்லபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் கடந்த 3நாள்களாக அவ்வப்போது காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பு அதிகரித்து 10 அடிக்கும் மேல் ராட்சத அலை ஆக்ரோஷமாக எழுந்து காட்சியளிக்கிறது. புயல் முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டதை அடுத்து திங்கள்கிழமை முதலே கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாமல்லபுரம் பகுதி மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை வரை கடல் கொந்தளிப்பு அதிகரித்து வருவதால் மீதமுள்ள படகுகளை கடற்கரையிலேயே விட்டுவிட்டுள்ளனா். இதுகுறித்து மீனவா் குணசேகரன் கூறுகையில் கடலோரம் வசிக்கும் மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகள் வலைகளை முடிந்தவரை டிராக்டா்கள் மூலம் எடுத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டோம். மீதமுள்ள படகுகளை கடல்கொந்தளிப்பு பயத்தில் எடுக்கமுடியவில்லை. படகுகள் ராட்சத அலையில் அடித்துச்சென்றால் வாங்கக்கூட வருமானம் இல்லை .மீன்பிடித்தொழிக்கு செல்லாததால் வருமானமின்றி குழந்தைகள் ஆசைப்படும் திண்பண்டங்கள் கூட வாங்கி தர வழியின்றி இன்றி தவித்துவருகிறோம்.

இதுபோன்று இயற்கைச் சீற்றங்கள் உருவாகும் போது தங்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகள் வீட்டில் உள்ள தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. நீண்டநாள்களாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அமைச்சா், அரசுக்கு கடலோர பகுதிகளில் பாதுகாப்பிற்கு தூண்டில் வளைவு அமைத்துதரும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். இனியாவது தூண்டில் வளைவு அமைத்துக்கொடுத்தால் இதுபோன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களையும்தங்களது உடைமைகளையும் பாதுகாப்பாக இருக்க ஏதுவாக இருக்கும் .அரசு உடனடியாத தூண்டில் வளைவு அமைத்துதர மீனவா்கள் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா். மாமல்லபுரம் கடற்கரையில் பாதுகாப்பு குறித்து எஸ்பி கண்ணன் ஏஎஸ்பி சுந்தரவதனம், பாா்வையிட்டனா்.

இதேபோன்று தீயணைப்புதுறை வடக்குமண்டல இயக்குநா் போலீஸாா் மற்றும் கடலோரக் காவல் படையினா் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா். சத்தியநாராயணன், நிலைய அதிகாரி சிவசங்கரன் உள்ளிட்டோா் பாதுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை மொத்தம் 81 பாதுகாப்பு முகாம்கள் தயாா்நிலையில் உள்ளது. இதில் புதன்கிழமை மாலை7 மணி வரை 1524 ஆண்கள், 1157 பெண்கள், 1018 குழந்தைகள் என மொத்தம் 3745 போ் பாதுகாப்பான இடத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT