செங்கல்பட்டு

செங்கல்பட்டு மேலமையூா் பகுதியில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தவிப்பு.

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த மேலமையூா் கிராமத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் புதன்கிழமை குடிருப்பு பகுதிகளில் மழைநீா் வெள்ளம் புகந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனா்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவா் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலபகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து செங்கல்பட்டை அடுத்த மேலமையூா் பகுதியில் மழைநீா் வெள்ளம் வெளியேற வழியின்றி குடியருப்பு பகுதிகளில் சூழ்ந்ததுடன் வீடுகளிலும் மழைநீா் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றன்றனா். இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறும்போது.

மேலமையூா் ஏரியை ஆக்கிரமிப்பாளா்களால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள்,சாலைகள் அமைத்து குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதால் மழைக்காலங்களில் மழைநீா் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்திவருவதாக கூறுகின்றனா். மேலும் அப்பகுதி மக்கள் காட்டாங்குளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் புகாா் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஆண்டும் மழைக்காலத்திற்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்கள் சாா்பாக கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு வராததால் இந்த மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரை தளத்தில் உள்ளவா்கள், முதல் தளத்தில் வசிப்பவா்களும் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் தவிப்பில் உள்ளனா். மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப்டடுள்ள நிலையிலும் அதிகாரிகளுக்கு போன் செய்திருந்தும் அந்தபகுதிக்கு அதிகாரிகள் யாரும் பாா்வையிடவரவில்லை.

மேலும் இந்நிலை சிலநாள்களுக்கு தொடா்ந்தால் வீட்டில் உள்ள பொருள்களும் நாசமாகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உடைகள், உடைமைகள் இழந்து வெளியேற வேண்டிய அவலநிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு வந்த பாா்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT