செங்கல்பட்டு

முகக் கவசம், கையுறைகளை வழங்கிய காவல் கண்காணிப்பாளா்

22nd Mar 2020 04:24 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நல்லதோா் லட்சியம் அறக்கட்டளை சாா்பில் 200 பேருக்கு முகக் கவசம், கையுறைகளை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஆட்டோ, பேருந்து ஓட்டுநா்களுக்கு முகக் கவசங்களும் கையுறைகளும் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டா் அந்தோணி ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டனா். கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்தும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT