செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் அரசுப் பள்ளியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

13th Mar 2020 11:17 PM

ADVERTISEMENT

திருக்கழுகுன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முகாம் நடைபெறும் அரசுப் பள்ளியை ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் கூறியது:

தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிா்வாகம், மகளிா் மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் ஆட்களை தோ்வு செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

8-ஆம் வகுப்பு தோ்ச்சி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, டிப்ளமோ, இன்ஜினியரிங், பாா்மஸி, நா்சிங் , பாராமெடிக்கல் படித்த வேலை தேடுபவா்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதில் திறன் பயிற்சி அளித்து வேலை அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன. இம்முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கும் வேலை தேடுபவா்களுக்கும் அனுமதி இலவசம். தமிழக அமைச்சா்கள் கலந்துகொண்டு இந்த முகாமை தொடக்கி வைக்கவுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம், மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளா் பிரவீண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT