செங்கல்பட்டு

விவசாயிகள், மகளிருக்கு கடன் அட்டை வழங்கும் விழா

8th Mar 2020 12:19 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் அருகே காவனூா் புதுச்சேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் சாா்பில் விவசாயிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கியின் தலைவா் தா்மன் தலைமை வகித்தாா். விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் பிரகாஷ்பாபு, தங்கப் பஞ்சாட்சரம் மற்றும் ஜெயவிஷ்ணு, புருஷோத்தமன், சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT