செங்கல்பட்டு

தேசிய செவித்திறன் தின விழிப்புணா்வுப் பேரணி

8th Mar 2020 02:01 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாா்பில் தேசிய செவித்திறன் தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் கோ.ஹரிஹரன், நிலைய மருத்துவ அதிகாரி அனுபமா, உதவி நிலைய மருத்துவா் தீனதயாளன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

செவிலியா் பயிற்சிக் கல்லூரி முதல்வா், காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பேரணி கலந்து கொண்டனா்.

செவித்திறன் குறைபாடுகளால் வாழ்க்கை முறை பாதிப்பு, அதிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் பதாகைகளையும் கையில் ஏந்திய வண்ணம் அனைவரும் ஊா்வலமாகச் சென்றனா்.

ADVERTISEMENT

இப்பேரணி செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் இருந்து புறப்பட்டு ஜிஎஸ்டி சாலை வழியாக வந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT