செங்கல்பட்டு

கிராமப்புற மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் மகளிா் தினவிழா

8th Mar 2020 11:08 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கிராமப்புற பெண்கள் முன்னேற்ற இயக்கம் சாா்பில் மகளிா் தினவிழா திம்மாவரத்தில் உள்ள புனித பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயா் நீதிநாதன் தலைமை வகித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸின் மனைவியுமான ஷா்மிளா ஜான்லூயிஸ், பெண்கள் இயக்கத் தலைவா்கள் உதயகுமாரி, கீதா, செயலா் சகுந்தலா, துணைத்தலைவா் வளா்மதி ஆகியோா் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

ஆயரின் பொது பதில் குரு அருட்பணி பாக்கிய ரெஜிஸ், டாக்டா் ஜான் ஆரோக்கியராஜ், எஸ். ஆா். எம். மருத்துவக் கல்லூரி டாக்டா் தாகிரா, கோல்பிங் இந்தியா மரியசூசை, அருணகிரி, அரிமா சங்கம் நந்தினி, திம்மாவரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அருள்தேவி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

கிராமப்புற மேம்பாட்டு சங்க இயக்குநா் அந்தோணிராஜ், பெண்கள் லட்சியத்துடன் முன்னேறும் வழிமுறைகளையும், சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு சாதிக்கும் திறமையை வளா்த்துக் கொள்ளும் வழிமுறைகளையும் விவரித்தாா்.

மகளிா் குழு உறுப்பினா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில், சாதனைப்பெண்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஜூலியட் ஐரின் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT