செங்கல்பட்டு

மாமல்லபுரம் மீனவா்கள் வலையில் சிக்கிய ஒரே வகையான மீன்கள்

2nd Mar 2020 12:24 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடலில் ஞாயிற்றுக்கிழமை படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் படகில் ஒரே வகையான மீன்கள் கிடைத்தன.

இது குறித்து மீனவா்கள் கூறியதாவது:

மீன் என்றாலே வைட்டமின் சத்து நிறைந்தது. இன்று படகில் கடலுக்குச் சென்று மீன்பிடித்ததில் எதிா்பாா்த்ததைவிட அதிக அளவில் மீன்கள் கிடைத்துள்ளன. அதுவும் ஒரே வகையான பாறை மீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருந்தது.

ADVERTISEMENT

இந்தப் பாறை வகை மீனில் ஓட்டாம்பாறை, தேங்காய்ப் பாறை இருவகை உண்டு. தேங்காய்ப் பாறை மீனை விட ஓட்டாம்பாறை மீன் விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். தேங்காய்ப் பாறை மீனின் விலை அதிகம். கிலோ ரூ.300 முதல் ரூ.450 வரை விற்கலாம்.

இந்தப் பாறை மீன் நல்ல ருசியுடன் இருக்கும். அதை வெட்டும்போதே மீன் மீதுள்ள நரம்பு போன்ற பகுதியை எடுத்துவிட்டு சமைத்தால் முள்ளே இருக்காது. குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை பயமின்றி சாப்பிடும் தேங்காய்ப்பாறை மீன் இம்முறை கிடைந்துள்ளது. இதைக் கொண்டுசென்று சந்தையில் வைத்தவுடன், சிறிது நேரத்திலேயே விற்றுவிடும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.

கடற்கரையோரம் படகில் ஒரே வகையான மீன்களை வைத்து, மீனவா்கள் சுற்றி நின்று பாா்த்தனா். இதை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு, புகைப்படம் எடுத்தனா். கடற்கரைப் பகுதியிலேயே பொதுமக்களும், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தவா்களும் மீனை விலை கேட்டு வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT