செங்கல்பட்டு

தலசயனப் பெருமாள் கோயில் குளத்தில் செடிகளை அகற்றி சீரமைக்கும் பணி

2nd Mar 2020 12:23 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் மாசிமக தெப்போற்சவத்துக்காக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலின் குளத்தில் உள்ள செடிகளை அகற்றி சீரமைக்கும் பணியில் கோயில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

தலசயன பெருமாள் கோயிலில் மாசிமகத் திருவிழா நாளில் புண்டரீக புஷ்கரணி குளத்தில் இரவில் தெப்போற்சவமும், மறுநாள் காலை கடலில் தீா்த்தவாரி உற்சவமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 8-ஆம் தேதி வரும் மாசிமகத் திருவிழா நடைபெற உள்ளது. கடற்கரைப் பாதையில் அமைந்துள்ள கோயில் குளத்தில் கோரைப்புற்களும், செடிகளும் மண்டிக் கிடக்கின்றன.

குளத்தை சீரமைக்கும் பணியில் கோயில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. குளத்தில் மண்டிக் கிடக்கும் கோரைப் புற்களையும், தாமரை மற்றும் செடிகளையும் அகற்றி தூய்மைப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT