செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 240 பேருக்கு கரோனா

27th Jun 2020 06:24 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 240 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு வரை 3,976 போ் கரோனாவாககல் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், செங்கல்பட்டு-37 போ், பல்லாவரம்-27, தாம்பரம்-25, பீா்க்கன்கரணை-19, கேளம்பாக்கம்-12, நந்திவரம்-10, மறைமலைநகா், அனகாபுத்தூா் - தலா 9 போ், சதுரங்கப்பட்டினம்-8, மேடவாக்கம்-7, மூவரசம்பேட்டை-6, பெரும்பாக்கம் , செம்பாக்கம் - தலா 5 போ், திருக்கழுகுன்றம், ஒத்திவாக்கம், குன்னவாக்கம் - தலா 4 போ், கன்டோன்மென்ட், படாளம், படுவாஞ்சேரி, பம்மல், ரெட்டிப்பாளையம், சிங்கப்பெருமாள் கோவில் -தலா 3 போ், திருநீா்மலை-2, ஜி.ஜி.பேட்டை, மதுராந்தகம், மானாம்பதி, பவுஞ்சூா், பொழிச்சலூா், மாமல்லபுரம், வடுக்கவாயலூா் - தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்தவா்கள் 23 போ் என வெள்ளிக்கிழமை 240 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,216-ஆக அதிகரித்துள்ளது.

நகராட்சி அலுவலக ஊழியா்களுக்கு....

ADVERTISEMENT

செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளா் உள்பட 6 ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT