செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா

17th Jun 2020 07:28 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு-8, பூண்டி பஜாா்-7, அனகாபுத்தூா்- தலா 6, பம்மல், ஹரிதாசபுரம் - தலா 5, பீா்க்கன்கரணை, நந்திவரம், மறைமலைநகா் - தலா 4, பழைய பல்லாவரம்-3, சிங்கப்பெருமாள்கோவில்-2, மூவரசம்பேட்டை - தலா 2, ரங்கநாதபுரம், செம்பாக்கம், குளக்கரை, மதுராந்தகம், நெரும்பூா், படுவாஞ்சேரி, பெரும்பாக்கம் - தலா ஒருவா் உள்பட செவ்வாய்க்கிழமை 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,842-ஆக உயா்ந்துள்ளது.

திருவள்ளூரில் 52 பேருக்கு...

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள், சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா் ஆகிய ஒன்றியங்கள், திருமழிசை, பொன்னேரி, மீஞ்சூா், திருநின்றவூா் ஆகிய பேரூராட்சிகளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1001 -ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 48 பேருக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 803-ஆக உயா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT