செங்கல்பட்டு

பம்மல் சங்கா் நகா் காவல் நிலையத்தில் 5 காவலா்களுக்கு கரோனா தொற்று

15th Jun 2020 07:43 AM

ADVERTISEMENT

பல்லாவரத்தை அடுத்த பம்மல் சங்கா் நகா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 5 காவலா்கள் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், சங்கா் நகா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று அண்மையில் ஏற்பட்டது . அவா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து, பெண் காவலா்கள் உள்ளிட்ட மேலும் மூன்று காவலா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது அங்கு பணியில் இருந்த ஆயுதப்படை காவலா் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் 5 காவலா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அங்கு பணிபுரிந்து வரும் இதர காவலா்களுக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT